×

தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு பணி 21,936 ஊழியர்கள்: 14ம் தேதி தடுப்பூசி முகாம் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: டெங்கு நோய் பரவாமல்  இருக்க 14,833 புகை  தெளிப்பான் மூலம், கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு  வருகிறது. மேலும் 21,936 ஊழியர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தமிழகம்  முழுவதும் ஈடுபட்டுள்ளனர். மழை கட்டுக்குள் இருந்தால் திட்டமிட்டபடி 14ம்  தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னையில் 400 இடங்களில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மழைக்கால சிறப்பு மருத்துவமுகாம் நேற்று நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் நடைபெற்ற  சிறப்பு  மருத்துவ முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். பின்னர் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சார்பில் 400 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியில் தண்ணீர் குறைந்த இடங்களில் நோய் பரவுவதை தடுக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர் போட மாநகராட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைப்போன்று தமிழகத்தில் தற்போது டெங்கு நோய் பெரிய அளவில் பரவாமல் இருக்க 14,833 புகை  தெளிப்பான் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 21,936 ஊழியர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர். மழை கட்டுக்குள் இருந்தால் திட்டமிட்டபடி 14ம் தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றார். அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் கடந்த 8ம் தேதியில் இருந்து 1193 மருத்துவ முகாம் அனைத்து மண்டலங்களிலும் நடைபெற்றுள்ளது. இதில் தற்போது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினர். …

The post தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு பணி 21,936 ஊழியர்கள்: 14ம் தேதி தடுப்பூசி முகாம் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Medical Secretary ,Radhakrishnan ,CHENNAI ,14th ,Medical Department ,Dinakaran ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து